Sunday, August 24, 2014

Windows 8 கணனியில் Power Menu இல் Hibernate Button ஐ தோன்றச் செய்வது எவ்வாறு?

Windows 8 கணனியில் Power Menu இல் Hibernate Button ஐ தோன்றச் செய்வது எவ்வாறு? ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★ நீங்களும் Windows 8 பயன்படுத்துபவரா? நாம் Windows 8 கணணியை Shutdown, Sleep அல்லது Restart செய்யவதற்கு Charm Bar இன் ஊடாக Settings ====> Power சென்று இவைகளை பெறுவோம். இருந்தாலும் Hibernate என்பதன் மூலம் உங்கள் கணணியின் இயக்கத்தை உடனடியாக நிறுத்திடலாம் இதற்கான வசதி Windows 8 இல் Shutdown, Sleep, Restart Button களுடன் சேர்த்து தரப்பட்டிருக்காது. இருப்பினும் Hibernate Button ஐ Shutdown, Sleep, Restart போன்றவைகளுடன் தோன்றுமாறு அமைத்திடலாம். இதற்கு பின்வரும் முறையை பின்பற்றுக ● முதலில் Control Panel சென்று Power Option என்பதை தெரிக. ● பின் தோன்றும் சாளரத்தில் Choose What the power buttons do என்பதை சுட்டுக. ● பிறகு தோன்றும் சாளரத்தில் Change Setting that are currently unavailable என்பதை சுட்டுக. ● இனி குறிப்பிட்ட சாளரத்தின் பகுதியில் Shutdown Settings என ஒரு பகுதி தோன்றும். ● அதில் Tick செய்யப்படாமல் இருக்கும் Hibernate என்பதற்கு ஒரு Tick இட்டு Save Changes என்பதனை அலுத்துக அவ்வளவுதான் இனி உங்கள் Power Menu இல் Hibernate Button தோன்றுவதை அவதானிப்பீர்கள்.

No comments:

Post a Comment